சாதாரண மனிதனும் தொழில் நுடபத்தை பயன்படுத்த வேண்டும்..! - அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் முதல்வர் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.



கோவை: சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள கேபிஆர் கல்லூரியில் சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் நடைபெற உள்ள "யூமாஜின் கருத்தரங்கம் பற்றி விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் தொழில் முனைவோர் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சந்தேகங்களை அமைச்சரிடம் கலந்துரையாடி கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:



சென்னையில் வரும் மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் "யூமாஜின் என்ற கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தபடி ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும்.

சாதாரண மனிதர்களும் தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

கடந்த 2 வருடங்களில் 20 சதவீதம் ஐடி துறை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட நகரங்களிலும் ஐடி துறைக்கான கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற நாடுகளில் ஐடி நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தது போல தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...