கோவையில் இளம் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞர் கைது

துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய அருண்குமார் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


கோவை: இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் இளைஞர் ஒருவர் அனுப்பியுள்ளார்.

இது சம்பந்தமாக அந்த பெண், சைபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தினர்.

அப்போது அப்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அனுப்பியவர் கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இது போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...