கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய அத்திப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணிடம், முதலீடு என்ற பெயரில் 9 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவரின் அலைபேசியில் வந்த டெலகிராம் லிங்கில் ரேட்டிங் தரும் பணி குறித்து தெரிவித்திருக்கின்றது.

இதனை நம்பிய பெண் டெலிகிராம் ஆப்பில் சில பக்கங்களுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு டாஸ்கையும் கம்பிளீட் செய்திருக்கின்றார். முதன்முறையாக முதலீடு செய்து 1000 ரூபாயை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய முடிவெடுத்த அப்பெண் அவரது, வங்கி கணக்கில் 15 நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை 9,12,106 ரூபாயை எதிர் தரப்பினர் வங்கி கணக்குக்கு மாற்றினார். அப்போது முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...