புறநானூற்றுப் பாடல்களை பாடி சாதனை - 4 வயது சிறுவனுக்கு குவியும் பாராட்டு!

உடுமலை அடுத்த சேரன் நகரை சேர்ந்த 4 வயது சிறுவன் விதுஷன், புறநானூற்றில், வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புறநானூற்று பாடலை ஒப்புவித்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு திறமைகள் உள்ளது. அவற்றை வெளிக் கொண்டு வரும் போது தான், அவை சாதனைகளாக வெளிப்படுகிறது. மேலும் சாதனை புரிவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை உடுமலையை சேர்ந்த சிறுவன் ஒருவர் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

உடுமலை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர்கள் ஜான்பால் மற்றும் கௌதமி தம்பதி. ஆசிரியர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு விதுஷன் என்ற 4 வயது மகன் உள்ளார். இவர், பள்ளிக்கு கூட செல்லாத நிலையில், மழலை பருவம் மாறாத மொழியில், புறநானூற்று பாடலை பாடி அசத்தி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

சிறுவன் விதுஷன், புறநானூற்றில் வீரத்தாய் குறித்த 63 பாடல் வரிகளை 2 நிமிடம் 33 வினாடிகளில் ஒப்புவித்து, இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...