கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல்

கோவையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 குழுவினர், நேற்று மாலை 4 மணியளவில் துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.



இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வாளர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போதுஒவ்வாரு அறைகள், மேஜைகள், குப்பை தொட்டி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். அதில், வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதேபோல், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.13,500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...