கல்வி நிறுவனங்களுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை - டீ மாஸ்டர் கைது!

கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகில் டீக்கடையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த டீ மாஸ்டர் வைரமூர்த்தி என்பவரை ரத்தினபுரி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ஆம்னி பேருந்து நிலையம் அருகே பின்புறம் பேக்கரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள பேக்கரி அருகாமையில் ரத்தினபுரி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பேக்கரியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில், சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்களை பேக்கரியில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

பள்ளி கல்லூரி போன்ற கல்வி நிலையங்களுக்கு அருகாமையில் இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்திற்கு புறம்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் புகையிலைப் பொருட்களை விற்றதற்காக பேக்கிரியிலிருந்த வைர மூர்த்தி என்ற டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து சிகரெட் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட டீ மாஸ்டரை பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...