இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - பல்லடத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் கைது!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், மார்ச் மாதத்துடன் முடியவுள்ள ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பழைய இரும்புகளை உருக்கும் கண்ணப்பன் அயன் ஸ்டில்ஸ் என்ற ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையானது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கி வருவதாகவும், ஆலையை சுற்றி பசுமை வளையங்கள் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டுவதாகவும், இரவு நேரங்களில் அதிகமாக புகை வெளியேற்றப்படுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆலைக்கு மார்ச் மாதத்தோடு உரிமம் நிறைவடைவதால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை மீண்டும் வழங்க கூடாது எனக்கூறி இன்று அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதலே பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.



அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.



மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...