வால்பாறை அருகே சோலையார் அணை நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சோலையார் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 31 கன அடியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் வால்பாறையில் சில எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்தது.



இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி, வால்பாறை 21 மில்லி மீட்டர் மழையும், சின்னகல்லார் 22 மில்லி மீட்டர் மழையும், நீரார் அணை 1 மில்லி மீட்டர் மழையும், சோலையாறு அணை 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.



சோலையாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 31 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 469 கன அடியாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...