பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ - இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா கைதானதை தொடர்ந்து, மாற்றம்பாளையத்தை சேர்ந்த கெளதம் என்ற இளைஞரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் நீதிமன்ற சாலையில் கொல்லப்பட்டார். ரவுடி சத்தியபாண்டியன் ஆவாரம்பாளையம் பகுதியில் துரத்தி துரத்தி வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையிலே கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கைதான ரவுடிகளிடம் விசாரணை நடந்தன. விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியது தெரியவந்தது. இந்த நிலையில்,சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையிலே பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டிருந்த பெண் தமன்னா என்கிற வினோதினி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், கோவை மாற்றம்பாளையம் பகுதியைச் சார்ந்த கௌதம் என்ற இளைஞர், தமது சமூக வலைதள பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்த போலீசார், இளைஞர் கௌதமை பிடித்துகுனியமுத்தூர் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...