கோவையில் கடன் வாங்கி தருவதாக மோசடி - 4 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்!

கோவை பீளமேடு பகுதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்த குணசெல்வி என்பவரிடம் தனிநபர் கடன் வாங்கி தருவதாக கூறி 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்மநபரை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: à®•ோவை பீளமேடு அடுத்த ஏடி காலனி பகுதியை சேர்ந்தவர் குணசெல்வி (வயது 50). இவர் அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் நைசாக பேசினார்.

முன்னணி வங்கியில் கடன்பெற்று தரும் வேலை செய்துவருவதாகவும், விருப்பப்பட்டால் உங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார்.

கடன் தேவை என்று குணசெல்வி தெரிவித்த நிலையில், அப்பெண்ணை ஒரு வங்கிக்கு அழைத்து சென்றிருக்கின்றார். வங்கிக்கு அருகிலே சென்றவுடன், நீங்கள் நகை அணிந்து வந்து கடன் கேட்டால், உங்களுக்கு தனிநபர் கடன் கிடைக்காது என்று கூறிய அந்த மர்ம நபர், குணசெல்வி அணிந்திருந்த நான்கு சவரன் தங்க நகைகளை வாங்கி பேப்பரில் மடித்து கொடுப்பதுபோல் அவரிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் குணசெல்வி வங்கியில் காத்திருக்குமாறு கூறி, ஆவணங்கள் சிலவற்றை வாங்கி வருவதாக அப்பெண்ணிடம் தெரிவித்து சென்றார். அந்த நபர் மீண்டும் வரவில்லை. சற்று நேரம் கழித்து அவர் மடித்துக் கொடுத்த காகிதத்தைப் பிரித்து பார்க்கும் பொழுது அதில் தங்க நகை இல்லாமல், கல் இருப்பதை கண்டு குணசெல்வி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையுடன் தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...