தாராபுரத்தில் பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்!

திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில், தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த பூத் கமிட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பூத் கமிட்டிகளை நிர்வகிப்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாஜக சார்பில், பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான மாவட்ட சக்தி கேந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பூத் கமிட்டி அமைப்பாளர்களுக்கான மாவட்ட சக்தி கேந்திர பயிற்சி முகாம் தாராபுரத்தில் இன்று நடைபெற்றது.



தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ் மோகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த பாஜக பொறுப்பாளர்கள், முன்னாள் சக்தி கேந்திர மற்றும் நகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், பாஜக தரவு மேலாண்மை பிரிவு தலைவர் ரமேஷ் குமார் கலந்து கொண்டு பேசியதாவது, ஒவ்வொரு பூத் கமிட்டியின் தலைவர்களுக்கும் நான்கு முதல் ஆறு பூத்களை நிர்வாகிக்க உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என தெரிவித்தார்.



தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி பேசியதாவது, சக்தி கேந்திர மூலம் அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி உறுதி செய்யப்படும். திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் மட்டும் 1174 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.



இதனை கவனத்தில் கொண்டு பாஜக நிர்வாகிகளும் சக்தி கேந்திர நிர்வாகிகளும் செயல்பட வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள பூத்துகளில் எத்தனை வார்டுகள் உள்ளதோ அங்கு வசிக்கும் பாஜக ஆதரவாளர்கள் எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள் உள்ளிட்டவர்களுடன் மரியாதை நிமித்தமாக சந்திப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம், நகர தலைவர் விநாயகா சதீஷ், மாவட்ட செயலாளர்கள் மைக்ரோ சுரேஷ் கருப்புசாமி, கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், மாவட்ட துணை தலைவர்கள் கோவிந்தசாமி, விஜயசுந்திரன் பெரியசாமி, கல்பனா, செந்தில், வடிவேல், செல்வா, பழனிச்சாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவர் டாக்டர் கார்த்திகா, மாவட்ட பொது செயலாளர் ஞானசௌந்தரி உட்பட மாநில மாவட்ட நகர பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...