உடுமலை அருகே குடிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு - அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட 23 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

உடுமலை அடுத்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெதப்பம்பட்டி, கொங்கல் நகரம், மூங்கில் தொழவு, அனிக்கடவு, இலுப்ப நகரம், கோட்டமங்கலம், குறுஞ்சேரி, புக்குளம் உள்ளிட்ட 23 ஊராட்சிகளில் கடந்த சில வாரங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில இடங்களில் குடிநீர் முறையாக வழங்க கோரி அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தது.



இதனிடையே குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டியில், குடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 23 கிராம மக்கள் கலந்து கொண்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தங்களது ஊராட்சிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



மேலும் குடிமங்கலம் ஒன்றியத்தில் தடுப்பணைகள் கட்டியது முறைகேடு மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.



இதன் பின்னர் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், கடந்த சில வாரங்களாக தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், இன்று குடிநீர் வடிகால் அதிகாரிகள் மற்றும் குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முறையாக கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது, என்றார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் மற்றும் குடிமங்கலம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...