ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அரசு பள்ளியில் வனத்துறை செயலாளர் ஆய்வு!

டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி யானையாகிய கலிம் 60 வயதை கடந்து ஓய்வு பெரும் விழாவிற்கு சென்ற வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளியை ஆய்வு செய்து சிறப்பாக செயல்படுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட பகுதியில் பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் கும்கி யானையாகிய கலிம் 60 வயதை கடந்து ஓய்வு பெரும் விழாவிற்கு வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு வருகை தந்தார்.

அப்போது வனப்பகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அதில் டாப்சிலிப் பகுதியில் உள்ள பழங்குடியினர் மாணவ-மாணவிகள் பயிலும் உண்டு உறைவிட பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தார். அங்கு டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறை, மேலும் சுத்தமான, சுகாதாரமான கழிப்பிடம், அறிவியல் வகுப்பு அறை, அறிவியல் ஆய்வகம் போன்றவர்களை ஆய்வு செய்து 90 மாணவர்கள் படிக்கும் பள்ளியை ஆய்வு செய்தார்.



இதை வனத்துறை செயலாளர் சுப்ரியா ஷாகு, தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளி என்று ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...