உடுமலை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - நகராட்சி அதிகாரிகள் அதிரடி!

உடுமலை அடுத்த திருப்பூர் சாலை அருகே அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான 10.50 சென்ட் நிலத்தை உரிமையாளர், நகராட்சியிடம் ஒப்படைக்காமல், வேறு நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் அதிகாரிகள் அதனை அதிரடியாக மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட திருப்பூர் சாலை அருகேயுள்ள அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 10.50 சென்ட் நிலமானது நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பூங்கா அமைப்பதற்காக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மனைப்பிரிவு உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியால் பூங்கா இடத்தினை கையகப்படுத்தி பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் இந்த இடத்தினை கிரயம் பெறாமலும், ஏமாறாமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 10.50 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி ஆகும்.

மேலும், நகராட்சியால் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடுகள் ஒப்படைக்காமல் உள்ளவற்றை. கண்டறிந்து நகராட்சி சுவாதீனப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் மு.மத்தின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...