தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் - உயிர் பலி ஏற்பட வாய்ப்பு!

திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகே கழிவு நீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதமாகியும் மூடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகில் திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கல் ஆகியவை சேதமடைந்து காணப்பட்டது.

இதனை சரி செய்வதற்காக திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு, பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளமானது 3 மாதங்களாகியும் இதுவரை மூடப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறிதும் தெரிவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை மாநில நெடுஞ்சாலை துறையினர் சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்து வருவதாகவும், அவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டால் காவல்துறையினர் விபத்து வழக்கு பதிவு செய்யும் பொழுது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சேர்த்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குவதில் பாதி தொகையை மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் புலன்விசாரணைக்கு பின்னிட்டு தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையில் வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...