கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குமா? - மெட்ரோ நிர்வாகம் பதில்

கோவையை சேர்ந்த தன்னார்வலரான பாலசுப்ரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான வேலைகள் எந்த நிலையில் உள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மனு அளித்திருந்தார். அந்த மனுவிற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவிற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

கோவையை சேர்ந்த தன்னார்வலரான பாலசுப்ரமணியம் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோவையில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான வேலைகள் எந்த நிலையில் உள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மனு அளித்திருந்தார். அந் மனுவிற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கேட்கப்பட்ட கேள்விகள் விவரம்: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து ரூ.9424கோடி ஒப்புதல் வழங்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, மெட்ரோ நிர்வாகம் சார்பில், இல்லை என்றும், தமிழக அரசின் ஒப்புதலுக்கு பிறகு இத்திட்டத்திற்காக இந்திய அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

அதேபோல், மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயார் செய்து முடித்து விட்டால், அதை தயாரித்த நிறுவனத்தின் விபரம் மற்றும் திட்ட அறிக்கை விபரம் வழங்க முடியுமா என்ற கேள்விக்கு, விரிவான திட்ட அறிக்கை M/s SYSTRA மற்றும் RITES கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகிறது என்று பதிலளிக்கப்பட்டது.

இதேபோல், எப்போது பணிகளை தொடங்குவீர்கள்? அதில் எந்த ரயில் பாதை முதலில் துவங்கும், மேலும் மெட்ரோ ரயில் பணிக்கு அடிக்கல் அல்லது பூமி பூஜை நடைபெற்றதா என்ற கேள்விக்கு?,விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி எப்போது தொடங்குவீர்கள் என்ற கேள்விக்கு?, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கவில்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் வருகின்ற இடத்தில் உள்ள நில மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக அரசு சார்பில், முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் விபரம் மற்றும் எந்தெந்த நாளிதழ்களில் பிரசுரம் ஆகியுள்ளது என்ற கேள்விக்கு, இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று 9 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...