கோவை பி.கே.புதூரில் வீடு புகுந்து திருட முயன்ற பட்டதாரி பெண் கைது!

கோவை பி.கே.புதூர் அருகே மூதாட்டி மட்டும் தனியாக இருந்த வீட்டில் பர்தா அணிந்து திருட முயன்ற பட்டதாரி பெண்ணான அனிதா என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: பி.கே.புதூரில் வீடு புகுந்து திருட முயன்ற பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை பி கே புதூர் சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவியும் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டனர். அப்போது சிவக்குமாரின் தாய் கமலம் (92) வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பிற்பகலில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த பெண் ஒருவர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து திருடன் முயன்றதாக தெரிகிறது.

இதனால் கமலம் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறி தப்ப முயன்றபோது, கமலத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்த, நாகராஜ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மடக்கிப் பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரது மனைவி அனிதா (30) என்பதும், பட்டதாரியான அனிதா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி விட்டு தற்போது வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து பீரோவிலிருந்த நகைகளைத் திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை பிணையில் விடுதலை செய்யவும், 10 நாட்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடவும் உத்தரவிட்டார். பணத் தேவைக்காக பட்டதாரி பெண் திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...