பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி ரூபாய் தொகையை மீட்டுத் தரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அம்மனுவில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 35 வருடங்களாக செயல்பட்டு வந்த பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிட்டு (பிஏசிஎல்) என்ற நிறுனத்தில் மாதத்தவணையாகவும், நிரந்தர வைப்பு தொகையாகவும் எங்கள் பகுதி முகவர்கள் மூலம் முதலீடு செய்தோம்.

நாங்கள் கூலி வேலை செய்து சிறுகச்சிறுக சேமித்து பிற்கால குடும்ப தேவைக்காகவும், ஜீவாதாரத்திற்காகவும் இதை முழுக்க முழுக்க நம்பியே முதலீடு செய்தோம்.

நாங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு முதிர்வு தேதியும் முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களது தொகைகள் வழங்கப்படவில்லை. லட்சக் கணக்கான மக்கள் முதலீடு செய்த சுமார் 6 கோடி ரூபாய் என்னவானது என்றே தெரியவில்லை.

எனவே, மத்திய, மாநில அரசுகளும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது தொகை திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...