திமுகவை கண்டித்து உடுமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த திமுக அரசை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள முக்கோணம் பகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அரசு பதிந்துள்ள பொய் வழக்கை கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் பேசிய திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் தாங்கள் கொண்டு வந்ததாக கூறி பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்து வருகிறார்கள். மேலும், மக்களை தொடர்ந்து ஏமாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளனர்.



அதிமுகவினர் மீதுதினந்தோறும் பொய்வழக்குகளை போட்டு வரும் நிலையில் தற்போது அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு போட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...