மேட்டுப்பாளையம் அருகே நாக்கில் காயத்துடன் யானை மீட்பு - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில், வாயில் காயத்துடன் சுற்றித்திருந்த காட்டுயானை, மருத்துவ மேல்சிகிச்சைக்காக டாப்சிலிப் யானை முகாமிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்த வாயில் காயம்பட்டயானையை பிடித்து இன்று வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

எனவே அதற்கு உதவியாக டாப்சிலிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று முத்துகல்லூர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் வைத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.



இதனையடுத்து காயம்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம் ஆகியோர் சிகிச்சை அளிக்க யானையை பரிசோதித்தனர். அப்போது, யானைக்கு வாயில் உள்ள நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.



யானைக்கு சிகிச்சை அளிக்க காயம்பட்ட யானையை கயிறு கட்டி ஒதுக்கு புறமான இடத்திற்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். யானை பிடிபட்ட இடத்திலேயே தற்காலிகமாக நிழலுக்காக சாமியானம் அமைத்து அதில் வைத்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



யானையின் நாக்கு பகுதியில் பெரிய அளவில் காயம் உள்ளதால் அதற்கு பத்து நாட்களாகவது சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறையினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் விரைவில்யானையை மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப் யானை முகாமிற்கு கொண்டுசெல்லப்படஉள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...