பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றுக..! - முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை

பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு சிரமத்துடன் கிராமங்களில் இருந்து உற்பத்தி செலவை கூட‌ சமாளிக்க முடியாமல் பாலை உற்பத்தி செய்கின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம், கொசவம்பாளையம் சாலையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் எம்எல்ஏ எம்எஸ்எம் ஆனந்தன், முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.



மக்களை திசை திருப்புவதற்காக திமுக அரசு, எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், திமுக ஆட்சியில் சட்ட-ஒழுங்கு கேலி கூத்தாகி உள்ளதாகவும், அதிமுக மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டால், தமிழகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று பல்லடம் எம்எல்ஏ எம்எஸ்எம் ஆனந்தன் தெரிவித்தார்.



இதை தொடந்து தமிழக முதல்வருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.



இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், அதிமுக மீது பொய் வழக்கு தொடுப்பதை திமுக அரசு நிறுத்தி கொள்ளவேண்டும். அதிமுகவிற்கு வழக்குகளை சந்திப்பது புதிதல்ல. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சந்தித்து சேர்ந்து செயல்படுவது அவருடைய விருப்பம்.

பால் உற்பத்தியாளர்கள் எவ்வளவு சிரமத்துடன் கிராமங்களில் இருந்து உற்பத்தி செலவை கூட‌ சமாளிக்க முடியாமல் பாலை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் இன்று கூடுதல் விலை கேட்டு போராட்டம் நடத்தி வரும் பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...