கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது..! - வானிலை மையம் தகவல்

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் குறைவாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்.



சென்னை: கோவை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மைய்யத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



தற்போது தென் தமிழகம் முதல் மத்திய பிரதேசம் வரை வடக்கு தெற்காக கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது.

இதன் காரணமாக மார்ச் 20 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மிதமான கோடை மழை பெய்யும்.

சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேகத்தின் அமைப்பை பொறுத்து தான் ஆலங்கட்டி மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில ஒரு இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக குமரி மாவட்டம் பெருஞ்சாணி, புத்தன் அணையில் 6 சென்டிமீட்டர்ரும் கோவை, மதுரை, தரும்புரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரளவு கோடை மழை பெய்துள்ளது.

மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் கோடைகால வெப்பநிலை கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் உள் மாவட்டங்களில் குறைவாக இருக்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...