மக்காசோளம் கொள்முதல் செய்து மோசடி - கோவை வியாபாரி தலைமறைவு!

கடலூர் மாவட்ட விவசாயிடம் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 116.640 டன் மக்காசோளம் வாங்கி பணம் தராமல் மோசடி செய்த கோவை வியாபாரி சலீம் பாஷா (42) என்பவர் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: ரூ.32.30 லட்சம் மதிப்பிளான மக்காசோளம் கொள்முதல் செய்து பணம் தராமல் தலைமறைவான கோவை வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (30). விவசாயி. இவர் வியாபாரிகளுக்கு மொத்தமாக மக்காசோளம் விற்பனை செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சலீம் பாஷா (42), என்பவர் கடந்த 26 ஆம் தேதி செல்போன் மூலம் அழைத்து தனக்கு மக்காச்சோளம் வேண்டுமென கேட்டுள்ளார்.

இதை அடுத்து குறைந்தபட்ச முன் பணம் மட்டுமே அனுப்பிய நிலையில் பார்த்திபன் பல தவணைகளாக ரூ.32.30 லட்சம் மதிப்பிலான, 119.640 டன் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் சலீம் பாஷா கூறியபடி வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் நிலுவையில் வைத்திருந்ததாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் தனதுசெல்போன் ஸ்விட்ச் ஆப் செய்ததால் சந்தேகமடைந்த பார்த்திபன் கோவை வந்து பார்த்தபோது சலீம் பாஷா தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சலீம் பாஷா மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சலீம் பாஷாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...