கோவையில் சரக்கு வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு?

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ராம்பாபு என்பவரது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவர் சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அவரது வாகனம் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.



ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

வாகனத்தை தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் ராம்பாபு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...