உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படம் வெளியீடு - தாராபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

தாராபுரம் திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியானது. நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.



திருப்பூர்: தாராபுரம் திரையரங்குகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.



இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்நிலையில் தாராபுரம் சக்தி சினிமா எஸ்.வி.ஆர் திரையரங்கில் இப்படம் வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் நடந்தது.



இதில், நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...