ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் யானையின் உடல் கண்டெடுப்பு

கோவை ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்ததுள்ளனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி சேம்புக்கரை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்த பெண் காட்டு யானையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை அதிகாரி அசோக்குமார் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த யானை இறந்து ஒரு வாரம் ஆகி இருக்கலாம் என்றும், நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று உடற்கூறாய்வு மேற்கொண்டு யானை இறப்பிற்கான உண்மையான காரணத்தை கண்டறியவுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...