தாராபுரம் அருகே 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - மீண்டும் தொடங்கி வைத்த அமைச்சர்

தாராபுரம் அருகே ஆய்கவுண்டன்பாளையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் பூண்டி ஊராட்சி ஆய்கவுண்டன்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



இதனை அறிந்த மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உடனடியாக ஆயி கவுண்டன்பாளையம் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று பேருந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது.



இந்த சேவையை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பேருந்து சேவை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து வேளாண்பூண்டி ஊராட்சியில் உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...