கோவையில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆண்டிற்கான 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை மற்றும் 500 ரூபாய் மருத்துவப்படி பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி உடனிருந்தார்.



அதன்படி அஞானமணி, இராமலிங்கம், செல்வராசு, சாமியப்பன், நரசிம்மன், இருதய சாமி, கிருஷ்ணரால் மற்றும் அகூத்தரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 01.04.202 முதல் திங்கள் தோறும் ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4,000 வழங்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் மறைவுக்குப் பின்னர் இவர்களது மரபுரிமையர் என இவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள மரபுரிமையருக்கு நடைமுறையில் உள்ள விதிப்படி உரிய சான்றுகளின் அடிப்படையில் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என ரூ.3000 எனும் வீதத்தில் திங்கள்தோறும் வழங்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழ்நாட்டிற்குள் எங்கும் சென்று வர இலவசப் பேருந்து பயணச் சலுகையும் வழங்கப்படுகின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...