கோவையில் சிறுமியை திருமணம் செய்த கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபரதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவையில் 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை 23 வயது இளைஞர் கடந்த 2020இல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானதாக தெரிகிறது. பின்னர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றார். அப்போது விசாரித்த போது சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆனது தெரியவந்தது.

இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் இளைஞர் பினையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...