ரியல், ரீல் ரவுகளை தட்டித் தூக்கிய தனிப்படை - அடிதடி சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலம்

கோவையில் சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்த ரியல் மற்றும் ரீல் ரவுடி கும்பலை சேர்ந்த 13 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


கோவை: கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை ஆணையாளர் சந்தீஸ், உதவி ஆணையாளர் ரவி, இன்ஸ்பெக்டர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதி ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். அதனடிப்படையில் சமீபத்தில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி தொடர்பாக 30 நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

அவர்கள் சண்டையில் ஆயுதங்களை பயன்படுத்தியது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் குற்ற பின்னணியில் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்த தனிப்படை போலீசார், ஒரே நாளில் ஜார்ஜ் ஸ்டீபன், ஜாபர் (எ) ராகுல்ராம், செல்வகுமார், உதயகுமார், கேசவன், சுப்பிரமணியன், வாசன், சூர்யா, சக்திவேல், சரவணன், சபரி ராஜ், பிரகாஷ், பிரதீப் குமார் உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கும் பொருட்டு ரவுடிகளுக்கு சமூக வலைதள ரீல் ரவுடிகள், அடிதடி, கட்டபஞ்சாயத்து ரவுடிகள் என தாதாக்களின் கும்பலின் குற்றச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை போலீசார் நடத்தும் இந்த தீவிர வேட்டை, ரவுகளை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...