கோவையில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு - பிக்பாக்கெட் கொள்ளையன் கைது

கோவையில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த பிக்பாக்கெட் திருடன் செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் இளம் பெண் யாமினி (வயது22). இவர் காந்திபுரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அவர் மேட்டுப்பாளையம் பேருந்தில் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேக்கை யாரோ இழுப்பது போன்று உணர்ந்துள்ளார்.

பேருந்தில் இருந்து ஒரு நபர் அவசர அவசரமாக இறங்கி சென்றிருக்கின்றார். அந்த பெண் தனது பேக்கை பார்த்த பொழுது அதில் வைத்திருந்த செல்போன் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருகாமையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்ற நபர் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது உக்கடம் காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...