வேகமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் - கோவையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருவதோடு, காண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்றுபோல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் எந்தவித காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சுகாதாரத் துறையினரிடம் தெரிவிக்க கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக நாள்தோறும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம் மூலம் தினசரி ஐந்தாயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகின்றனர். இவர்கள் 180 முதல் 200 பேருக்கு அனைத்து விதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தீவிர பாதிப்பு இல்லாத மருந்துகள் வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது 12000 கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களுக்கு எந்த விதமான அல்லது லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கு சிகிச்சை பெற்றாலும் அந்த பகுதியில் கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு, பள்ளிக்கு வரும் மாணவர்களின் விவரங்களை அளிக்க மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து அளிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை அந்த அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் சோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...