சொத்துவரியை 50 சதவீதம் குறைக்கக் கோரிக்கை - பொள்ளாச்சி நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி நகராட்சியில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் 50 சதவீதம் சொத்து வரி குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில் சொத்து வரி குறைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சியில் நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை 50% குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், சொத்து வரி 50 சதவீதம் குறைக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்படவுள்ளது.

இதன் மூலம் முதல் கட்டமாக வணிக நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரியை குறைக்கவும், குடியிருப்பு கட்டிடங்களுக்கும் சொத்துவரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வர் பொள்ளாச்சி நகராட்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...