கோவையில் பூட்டிய வீட்டில் தீவிபத்து - போலீசார் தீவிர விசாரணை

கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி ராமசாமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது.


கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி, மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி வித்யா (வயது57), இவர் 13 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு, உக்கடம் பகுதியில் உள்ள எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வித்யா வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு காலை பத்து மணியளவில் வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், மாலை சுமார் 4 மணியளவில் வித்யாவின் வீட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த கோவைப்புதூர் தீயணைப்பு துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும், வீட்டிலிருந்த டிவி, பிரோ, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிநாசமாயின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...