உடுமலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், தளி, மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கரமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில்நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்வினீத் முன்னிலை வகித்தார்.



அனைத்துத்துறை அலுவலர்களும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில், வளர்ச்சித்திட்ட பணி களை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.



பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியினைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...