பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு - 2வது நாளாக நீடிக்கும் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் இரும்பு உருக்கு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை கும்மி பாடலாக பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனியார் இரும்பு உருக்கு ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகவும், நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் சுவாசக் கோளாறு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இந்த ஆலைக்கு புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை வழங்கக் கூடாது எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.



இதன் தொடர்ச்சியாக நேற்றில் இருந்து அனுப்பட்டி கிராமத்தில் ஊருக்கு நடுவே பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இரண்டாவது நாளாக இன்று ஆலையால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆதங்கங்களை கும்மி பாடலாக பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆலையை நிரந்தரமாக மூடும்வரை போராட்டம் தொடரும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அனுப்பட்டு மக்களின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு அருகிலுள்ள பணிக்கம்பட்டி, புளியம்பட்டி பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...