ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிலையத்தில் நடராஜர் சிலை நிறுவப்பட்டது ஏன்? - வெளியான உண்மை தகவல்!

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERN வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலையானது இந்தியாவால் பரிசளிக்கப்பட்டு, கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி அங்கு நிறுவப்பட்டதாகவும், அந்த சிலையை தமிழகத்தை சேர்ந்த ராஜன் என்ற சிற்பக்கலைஞர் உருவாக்கியதும் தெரியவந்துள்ளது.


டெல்லி: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERN வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை எப்படி அங்கு சென்றது என்பது குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.



ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பான CERN (European Organization for Nuclear Research) உலகின் முன்னணி அணு ஆராய்ச்சி நிறுவனமாக கருதப்படுகிறது.



இந்த நிறுவனத்தின் வளாகத்தில், 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த சிலை எப்படி ஐரோப்பாவுக்கு சென்றது என்று நெட்டிசன்கள் யூகித்து வரும் நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கதைகள் பரவி வருகிறது.

நடராஜர் சிலையானது அணுவின் கட்டமைப்பை போன்று உள்ளதாகவும், அதன் காரணமாகவே அதனை அந்த CERN வளாகத்தில் அமைக்க விஞ்ஞானிகள் முடிவு செய்ததாகவும் சிலர் கூறுகின்றனர். நடராஜரின் ஆனந்த தாண்டவ தோரணையில் அமைந்துள்ள சிலையானது துணை அணுக்களின் இயக்கத்தை குறிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இவ்வாறு இணையத்தில் பரவும் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றாலும், CERN இணையதளத்தில், அந்த வளாகத்தில் நடராஜர் சிலை இருப்பது உறுதி செய்து, சிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விளக்கியுள்ளது.

CERN இன் இணை உறுப்பு நாடுகளில் ஒன்றான இந்தியா கடந்த 1960ஆம் ஆண்டில் இருந்து CERN உடனான உறவை பலமாக வைத்துள்ளது, அதன் காரணமாக, இணை உறுப்பு நாடான இந்தியா CERN நிறுவனத்திற்கு இந்த நடராஜர் சிலையை பரிசளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CERN என்பது 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 680 நிறுவனங்களில் இருந்து விஞ்ஞானிகளை வரவேற்கும் ஒரு பன்முக கலாச்சார அமைப்பாகும். CERN இல் உள்ள பல சிலைகள் மற்றும் கலைப் பொருட்களில் இந்த நடராஜர் சிலையும் ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து மதத்தில், சிவபெருமான் சக்தி அல்லது உயிர் சக்தியைக் குறிக்கும் நடராஜர் நடனத்தைப் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. நடராஜரின் பிரபஞ்ச நடனத்திற்கும் துணை அணு துகள்களின் 'காஸ்மிக் நடனம்' பற்றிய நவீன ஆய்வுக்கும் இடையில் வரையப்பட்ட உருவகம் காரணமாக இந்த சிலை இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த சிலையானது, கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி CERN -ல் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை ஒரு மத மற்றும் ஆன்மீக சின்னமாக இருந்தாலும், இது தமிழ்நாட்டைச் சேர்ந்த நாத்திக கலைஞரால் உருவாக்கப்பட்டதாக பிபிசியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் இந்த சிலையை உருவாக்கியது ராஜன் என்ற சிற்பி என்பதும், அவர் பெரியாரின் கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...