கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை வழக்கு - முக்கியக் குற்றவாளி கைது

கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான பார்த்தசாரதி என்பவரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக கடந்த மாதம் கோகுல் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தூத்துக்குடியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் இன்று ரத்தினபுரி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதை அடுத்து கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி தலைமையிலான போலீசார், ரவுடி பார்த்தசாரதியை கைது செய்ய முற்பட்டபோது அப்பகுதி வழியே காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளார்.

அப்போது காவல்துறையினரும் அவரை விரட்டி சென்றபோது, ரத்தினபுரி அடுத்த ரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதால் கால் உடைந்து காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எழுந்து நிற்க முடியாமல் இருந்த ரவுடி பார்த்தசாரதியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...