உடுமலையில் சின்ன வெங்காயம் அறுவடை துவக்கம் - பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் கவலை!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காய பயிர் அறுவடை துவங்கிய நிலையில், சில இடங்களில் கடுமையான பனிபொழிவு, வெயில், மழை இல்லாதது என பருவநிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், கடுமையான நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பருவ நிலை மாற்றத்தால், சின்ன வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இதில் காய்கறி பயிர்களில் சின்ன வெங்காயம் பிரதானமாக உள்ளது.



உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நாற்று நடவு முறை மற்றும் நேரடியாக காய் நடவு முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பகுதிகளில் பிரதானமாக சின்ன வெங்காயம் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நோய் தாக்குதல் விலை சரிவு சாகுபடி செலவினம் பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்டதால் நடப்பு பருவத்தில் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.



இந்த பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கியுள்ளது.

சாகுபடியில் விதைப்பு பருவத்தில் மழையின் அளவு குறைந்தது. தொடர்ந்து பெய்த அதிக பனிப்பொழிவு, கடும் வெயில் உள்ளிட்ட காரணங்களால் கழை கொல்லி பூச்சி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் குறித்து தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்காத நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.



இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனை அடைந்து வருகின்றனர். வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 7 முதல் 8 டன் வரை மகசூல் இருக்கும் நிலையில் நடப்பு ஆண்டு 4 டன் மட்டும் மதசூல் கிடைத்து உள்ளது. ஒரு சில பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் ஒட்டுமொத்த வெங்காயமும் கருகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளைநிலங்களில் 20 முதல் 25 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 70 முதல் 80 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், நடப்பாண்டும் கடுமையான பனிபொழிவு, வெயில், மழை இல்லாதது என பருவநிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மகசூல் குறைந்தும் விலையும் குறைவாக உள்ளது. பல இடங்கள் வெங்காயம் சேதமாகி வருகின்றது. பருவமழை ஏமாற்றம், இடைதரகர்களின் ஆதிக்கத்தால் போதிய விலை இல்லாதது உட்பட பல்வேறு பிரச்சனைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் இதில் தலையிட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...