கேரளாவுக்கு 2 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - கோவையில் பெண் ஊழியர்கள் உட்பட மூவர் கைது!

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார், அவருக்கு உடந்தையாக குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனை செய்த நியாய விலைக்கடை பெண் ஊழியர்கள் மீனா மற்றும் லதா ஆட்டோ ஓட்டுனர் அய்யாதுரை ஆகியோரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நியாய விலை கடை பெண் ஊழியர்கள் இருவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குநர் அருண் உத்தரின் பேரில் தமிழகம் முழுவதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், கோவை மாவட்டம் முழுவதும் கேரளா செல்லும் சாலைகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் புட்டு விக்கி சாலையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் நேற்றைய தினம் (மார்ச் 17) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தலா 50 கிலோவாக 40 மூட்டைகளில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 டன் ரேசன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார். ஆட்டோ ஓட்டி வந்த அய்யாதுரை என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, துக்கரை பாலத்துறையை சேர்ந்த சுதாகர் என்பவர் மூலம், கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள இரண்டு கூட்டுறவு நியாய விலைக் கடையில் ரேசன் அரிசியை, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் மூலம் மலிவான விலையில் வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடர்ந்து, நியாய விலை கடைக்கு நேரில் சென்ற குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், விசாரணை மேற்கொண்டதில் கூட்டுறவு நியாய விலை கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்களான வடவள்ளியை சேர்ந்த மீனா மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த லதா ஆகிய இரண்டு பேரும் மலிவான விலைக்கு அரிசியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...