பல்லடத்தில் கெட்டுப்போன கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு!

பல்லடத்தில் கெட்டுப்போன கேக்குகளை சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கெட்டுப்போன கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மங்களம் சாலை, பொள்ளாச்சி, உடுமலை சாலை, திருப்பூர் சாலை, செட்டிபாளையம் சாலை உள்ளிட்ட ஆறு இடங்களில் பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார்.



இந்நிலையில் இன்று மதியம் பல்லடம் மங்கலம் சாலை அரசு மேல்நிலை பள்ளி மற்றும் அரசு கல்லூரிக்கு எதிரே இயங்கி வரும் சோனா பேக்கரி கடைக்கு அரசு கல்லூரி சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி என்பவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.



அந்த கடையில் தனது மகள்களுக்கு கேக் வாங்கி கொடுத்துள்ளார்.

குழந்தைகள் வாங்கி சாப்பிட்ட கேக்குகள் கெட்டுப்போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பேராசிரியர் மகாலட்சுமி கெட்டுப் போன இரண்டு கேக்குகளையும் கடை ஊழியர்களிடம் கெட்டுப்போன உணவு பண்டத்தை ஏன் கொடுத்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



இதுகுறித்து தகவலறிந்து பல்லடம் உணவு பாதுகாப்புத் துறை வட்ட அலுவலர் கேசவராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.



அதில் கெட்டுப்போன காலாவதியான தயாரிப்பு தேதியும் அச்சிடப்படாத கேக் வகைகளை கடைக்காரர்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மாதிரி கேக்குகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்து சென்றனர். இந்நிலையில், கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும், முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பல்லடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பேக்கரி கடை அதிபர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...