கோவை வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை குத்திக்கொலை செய்தவர் கைது!

வெள்ளலூர் அடுத்த வள்ளியமைபுரம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர் கோபிநாத்தை குத்திக் கொலை செய்த முனியப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



வெள்ளலூர் அருகேயுள்ள வள்ளியமைபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோபிநாத் (33). இவருக்கு ஜோதி(28) என்ற மனைவியும், ராஜேஷ்குமார்(10) என்ற மகனும் உள்ளனர்.



இவரது நண்பரான முல்லை நகரை சேர்ந்த முனியப்பன்(25) என்பவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். நேற்று நள்ளிரவு மதுரை வீரன் கோவில் அருகே கோபிநாத்தும், முனியப்பனும் மது அருந்துவிட்டு பேசிகொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முனியப்பன், கோபிநாத்தின் மார்பில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...