கோவையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது - சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ கஞ்சா, ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலுள்ள ரயில்வே பாலம் அருகே போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்துவந்த சூர்யா (29) மற்றும் ஸ்ரீ ராகவேந்தர் (25) ஆகியோரை கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் உயர் ரக இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சூர்யா மீது ஏற்கனவே குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் நடந்து வருவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சரவணம்பட்டி பகுதியில் அஞ்சுகம் நகர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவபிரசாத் (25) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைதான சிவப்பிரசாத் மீது குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார் ராமநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிர்மல்குமார் (26) என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, கஞ்சா பொட்டலங்கள், ஒரு ஆட்டோ, ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...