கோவை பெண்கள் சிறையில், மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ‘வரும் முன் காப்போம்’ என்ற எண்ணத்தில், பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை பெண்கள் தனிக்கிளைச்சிறையில் பெண் சிறைவாசிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின் படி கோவை பெண்கள் தனிகிளை சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்று நோய் கண்டறியும் மருத்துவ சோதனைகள் நடைபெற்றது.

செந்தமிழ் அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ''வரும் முன் காத்தல்" என்ற எண்ணத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கோவை மாவட்ட மகப்பேறு மருத்துவ சங்க மருத்துவர்கள் ராதிகா, சிலம்புசெல்வி மற்றும் சுதா ஆகியோர் மூலம் பெண் சிறைவாசிகளுக்கு கற்பப்பை வாய் புற்று நோய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனை நடைபெற்றது.

இந்த முகாமில் இவ்வகையான புற்றுநோய் வரக்காரணம், அதனை தவிர்க்கும் வழிமுறைகள், எவ்வாறு கண்டறிய வேண்டும் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் பெண் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் பெண் சிறை வாசிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...