தாராபுரத்தில் அரசு பள்ளியின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அடுத்த எலுகாம்வலசு அரசு மேல்நிலை பள்ளிக்கு அனிதா டெக்ஸ்ட் காட் நிறுவனம் சார்பில் கட்டி தரப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடங்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அரசு பள்ளியின் புதிய கட்டிடங்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தாராபுரம் அருகேயுள்ள எலுகாம்வலசு அரசு மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவரும் அனிதா டெக்ஸ்ட் காட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருமான சந்திரசேகர் புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அனிதா டெக்ஸ்ட் காட் மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை சார்பில் 1.25 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த புதிய கட்டிடங்களுக்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு அனிதா டெக்ஸ் காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர், உமா மகேஸ்வரி சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளி தமிழ் ஆசிரியர் முத்தமிழ்வேனே அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.



மேலும் பள்ளிக்கு 23 வகையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணித உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதோடு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு கலைக் கல்லூரி அல்லது இன்ஜினியரிங் மேற்படிப்புக்கான கல்விக் கட்டணம் விடுதி கட்டணம் என அனைத்துமே அனிதா டெக்ஸ்ட் காட் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து அனிதா டெக்ஸ்காட் சேவையை பாராட்டி சந்திரசேகர் குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாக அமைச்சர் சாமிநாதன் கேடயம் வழங்கினார். இந்த நிகழ்வில், திரைப்பட இயக்குனர் சித்தி ஜெயந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவராம், எக்ஸ்பிரஸ் குழு தலைவர் முருகானந்தம், நேச்சுரல்ஸ் நிறுவனர் குமரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், அனிதா டெக்ஸ்ட் கார்ட் இந்தியா நிறுவனத்தின் கவின் நாகராஜ், இளங்கோ சேம்பர் நிர்வாகி திருப்பூர் பாலாஜி, தாராபுரம் நகர அதிமுக செயலாளர் ராஜேந்திரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...