உடுமலை நகராட்சியில் வேலை தருவதில் பாரபட்சம் - அமைச்சர் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் புகார்!

உடுமலை நகரமன்ற அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் வேலைகள் முறையாக நடைபெறவில்லை என்றும், திட்டமிட்டு சில வார்டுகள் ஒதுக்கப்படுவதாக முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் திட்டமிட்டு சில வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக திமுக கவுன்சிலர்கள் அமைச்சரிடம் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதிகளில் அரசு திட் டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வீனித் மற்றும் அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்.



இக்கூட்டத்தில் பேசிய திமுக நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகள் அனைத்து வார்டுகளுக்கும் முறையாக வழங்கப்படுவதில்லை. சில வார்டுகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பகிறது.நகர மன்ற ஒப்பந்த குழு, தலைவருக்கு தெரியாமல் ஒப்பந்தங்கள் ஏலம் விடப்படுகிறது என்று புகார்களை தெரிவித்தனர்.

மேலும் உறுப்பினர்கள் பேசுகையில், உடுமலை ஐஸ்வர்யா நகரில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மருத்துவ சங்கத்தினர் வியாபார நோக்கத்தில் கட்டியுள்ளனர். அதை அகற்றிவிட்டு நகராட்சி நிர்வாகம் பூங்கா அமைக்க வேண்டும்.

நகராட்சிக்கு சொந்தமான வார சந்தையில் இருக்கும் கடைகளை உள் வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், ஆழ்குழாய் மற்றும் கிணறுகளில் இருந்து லாரிகளில் மூலம் தண்ணீர் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தளி மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். நகராட்சியில் பணி புரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...