வால்பாறையில் பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்று திறப்பு!

வால்பாறையில் உள்ள அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் விதமாக சாலையோர சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு உள்ளிட்டோர் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர சுவர்களில் வரையப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் படங்களை நகராட்சி தலைவர் இன்று திறந்து வைத்தார்.

வால்பாறை பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில் அறிய வகையான சிங்கவால் குரங்கு, மற்றும் இருவாச்சி பறவைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க வன துறையினரும் NCF தன்னார்வலர்கள் இணைந்து ஆராய்ச்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

NCF தன்னார்வலர் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளை ஆராய்ச்சி செய்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.



பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக வால்பாறை டவுன் பகுதியில் உள்ள சுவர்களில் பறவைகள் மற்றும் விலங்குகளை படம் வரையப்பட்டன. முதல் கட்டமாக நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உள்ள சுவற்றில் அப்பகுதியில் வாழும் 38 பறவை மற்றும் விலங்குகள் படம் வரையப்பட்டன.



சுவர்களில் பறவையின் படமும் அதன் பெயரும் வரையப்பட்டுள்ளன.



இதனை இன்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு மற்றும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனை அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் NCF தன்னார்வ நிறுவனர் திவ்யா, சங்கரராமன், கணேஷ், ரகுநாத், ஶ்ரீநிவாசன், அஷ்னி, சதிஷ் குமார், ஸ்டெல்லா, மூர்த்தி, பிரகாஷ், சுமதி, அகில், ஷாமா, பவித்ரா மற்றும் வரைபட கலைஞர் சர்டாஜ், மணாலி, மாதவன், மகாலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...