வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வால்பாறையில் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு உதவிகளும், முதியோர் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று காருண்யா சோசியல் சென்டர் நிறுவனம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது இதில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளிலும் காருண்யா சோசியல் சர்வீஸ் சென்டர் மூலம் சுய உதவி குழுவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர். சுய உதவி குழுக்களை சிறப்பாக நடத்துபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தூய இருதய பள்ளி தாளாளர் சௌமியா பேசியதாவது, பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். தலைசிறந்து விளங்க வேண்டும். பெண்களுக்கு பிரச்சனைகளை கையாளுவது எப்படி என்றும் பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வால்பாறை மையப்பகுதியான காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் மற்றும் புதிய பேருந்து நிலைய வரை பேரணி நடைபெற்றது.



இந்த விழாவில் வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், பள்ளி தாளாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...