கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க ஆலோசனை கூட்டம்

கோவையில் குரும்பர் இன மக்கள் நல சேவை சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் குரும்பர் இன மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



கோவை: குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற உள்ள குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநில மாநாடு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை மேட்டுப்பாளையம் சாலை. ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.



குரும்பர் இன மக்கள் நல சேவை சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குரும்பர்‌ இனத்தை பழங்குடியின பட்டியலில் இணைப்பது, அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது, கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ள குரும்பர் இன மக்களுக்கு அரசியல் மற்றும் அதிகார பிரதிநிதித்துவம் அளிக்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

குரும்பர் இன மக்களை அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தால் அவர்களை முற்றிலும் புறக்கணிக்க கூடிய சூழல் உருவாகும். குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதியாக உருவாக்குவதற்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...