குடிபோதையில் தகராறு - கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி:கோவையில் பரபரப்பு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தொடர்ந்து தினமும் குடித்து விட்டு தொல்லை கொடுத்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கலாமணியை போலீசார் கைது செய்தனர்.



கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(60). கூலித் தொழிலாளியான இவருக்கு, கலாமணி(55) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், செல்வராஜூம், கலாமணியும் தனியாக வசித்து வந்தனர். அவ்வப்போது மகள்கள் வந்து தாய், தந்தையை பார்த்து செல்வார்கள். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

மனைவியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்றிரவு வழக்கம் போல செல்வராஜ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே கலாமணி கணவரிடம் கோபித்து கொண்டு வெளியில் சென்று விட்டார். இருப்பினும் தொடர்ந்து செல்வராஜ் வீட்டிற்குள் இருந்தபடி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலாமணி, கீழே கிடந்த கல்லை எடுத்துச் சென்று செல்வராஜ் தலைமீது போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அப்போது அக்கம்பக்கத்தினர், சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்கும் தகவல் கொடுத்தனர்.



தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் செல்வராஜின் உடலைப் பரிசோதித்தனர். அப்போது அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கணவரை கொன்ற மனைவி கலாமணியை கைது செய்தனர்.

குடிபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை மனைவியே கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...